கோவையைச் சேர்ந்த எஸ்.டி.சுப்பு 27 ஆண்டுகளாக புகைப்படக்காரராக பணிபுரிந்துவருகிறார். பத்துக்கும் மேற்பட்ட காமிராக்கள், 20க்கும் மேற்பட லென்ஸுகள் என்று சேகரித்திருக்கும் சுப்புவின் காமிரா கண்கள் பதிவு செய்த தருணங்கள் எண்ணிலடங்காதவை. தற்போது நாளிதழ் ஒன்றிலும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கும் பணிசெய்யும் இவரது காமிராவில் சிக்கிய தேர்தல் பிரச்சாரப் படங்களில் சில இங்கே. சுப்புவுக்கு கானுயிர் படங்கள் எடுப்பதிலும் ஆர்வம் அதிகம். நேரம் கிடைக்கையில் வனவிலங்குகளைத் தேடி கிளம்பிவிடுவார் இந்த 49 வயது இளைஞர்!
பிப்ரவரி, 2016.